106 வயதில் உலகத்தை சுற்றி கின்னஸ் சாதனை படைத்த பேராசிரியர்

106 வயதில் உலகத்தை சுற்றி கின்னஸ் சாதனை படைத்த பேராசிரியர்

ஜப்பானைச் சேர்ந்தவர் சபுரோ ஷோசி. இவருக்கு 106 வயது ஆகிறது. கல்வியாளரான இவர் புகுயோகா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியவர். தற்போது ஓய்வு பெற்றாலும் கூட கவுரவ பேராசிரியராக அங்கு பணிபுரிகிறார்.



இவர் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனக்கு தனியாக வாகனம் எதுவும் வைத்து கொள் ளாமல் பொதுமக்களுடன் சேர்ந்து பயணம் செய்துள்ளார். தனது உலக பயணத்தை வெற்றிகரமாக முடித்த அவர் கடந்த மாதம் (ஜூலை) 16-ந்தேதி ஜப்பானில் உள்ள புகுயோகா விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.
தனது 100-வது வயதில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இவர் கனடா, பல்கேரியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 56,700 கி.மீட்டர் பயணம் செய்துள்ளார். தென்ஆப்பிரிக்கா சென்ற இவர் அங்குள்ள கேப்டவுனில் சர்வதேச மனோதத்துவ நிபுணர்கள் மாநாட்டில் உரை நிகழ்த்தினார். வயது முதிர்ந்த காலத்தில் உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்த நபர் என்ற உலக சாதனை படைத்துள்ளார். இதற்காக அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment