நாமக்கல் மாவட்டத்தில் மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் ஒருவர் பணியில் இருந்து `டிஸ்மிஸ்' செய்யப்பட்டார். 


August 24 
சமீப காலமாக தமிழ்நாட்டில் சில பள்ளிகளில் மாணவிகளிடம் ஆசிரியர்கள் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார்கள் வந்தது. இது குறித்து மாணவிகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சில ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.  இதைத் தொடர்ந்து புதிய விதிமுறையை கல்வித்துறை வகுத்தது. அதன்படி மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் `டிஸ்மிஸ்' செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது.
 
இந்த அறிவிப்பின்படி முதல் நடவடிக்கையாக நாமக்கல் மாவட்டத்தில் மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் ஒருவர் பணியில் இருந்து `டிஸ்மிஸ்' செய்யப்பட்டார். இதுபற்றிய விவரம் வருமாறு:-
 
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றியவர் சத்திய பிரபு (வயது 34). இவர் மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக அவர்களது பெற்றோர் போலீ சில் புகார் செய்தனர்.  இதைத் தொடர்ந்து ஆசிரியர் சத்தியபிரபு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இதனால் அவர் தற்காலிக வேலை நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டு இருந்தார். தற்போது அவர் நிரந்தர மாக பணியில் `டிஸ்மிஸ்' செய்யப்பட்டு உள்ளதாக நாமக்கல் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி அருள் மொழிதேவி கூறினார்.  ஆசிரியர் சத்தியபிரபு மீதான புகார்கள் குறித்து கல்வித்துறை சார்பில் விரிவான விசாரணை நடத்தப்பட்டது.
 
அதில் அவர் மீதான புகார் உண்மை என்று தெரிய வந்தது. இது குறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு நாமக்கல் மாவட்ட தொடக்க கல்வித்துறை சார்பில் அறிக்கை அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப் படையில் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


No comments:

Post a Comment