ஸ்ரீரங்கம் தொகுதிக்கு முதல்-அமைச்சர் 
 SEPTEMBER 3-ந்தேதி வருகிறார். 


ஜெயலலிதா 3-ந்தேதி ஸ்ரீரங்கம் வருகை: நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு முதல்-அமைச்சர்  வருகிற செப்டம்பர்  மாதம் 3-ந்தேதி வருகிறார். அன்று நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். அப்போது, ஸ்ரீரங்கம் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட பலகோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பேசுகிறார்.


மேலும் திருச்சி மாவட்டத்திற்கும் பல கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். முதல்-அமைச்சர்  பங்கேற்கும் விழா நடைபெறும் இடம் தேர்வு செய்வது குறித்து நேற்று அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம்விஸ்வநா தன், கே.பி.முனுசாமி, என்.ஆர்.சிவபதி, கலெக்டர் ஜெயஸ்ரீ, மாவட்ட செயலாளர் மனோகரன் எம்.எல்.ஏ., பரஞ்சோதி எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஸ்ரீரங்கம் மேல சித்திரை வீதி, கீழ சித்திரை வீதி சந்திக்கும் பகுதி வடக்கு வீதி, தெற்குவீதி, சந்திக்கும் இடம் திருவானைக்கோவில் இடங்களை ஆய்வு செய்தனர். இதில் ஏதாவது ஒரு இடத்தில் விழா நடைபெறும். இடம் தேர்வு செய்யும் போது மாநகராட்சி கோட்டத் தலைவர்கள் சீனிவாசன், லதா, மற்றும் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு முதல்-அமைச்சர்  ஸ்ரீரங்கத்துக்கு அரசு திட்ட பணிகளை தொடங்கி நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தருவது இது 3-வது முறையாகும்.
முதலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் மக்களுக்கு நன்றி தெரிவித்து 2011 ஜூலை மாதம், 19, 20, 21 ஆகிய 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது, ஸ்ரீரங்கத்தில் நடந்த விழாவில் நலத்திட்ட உதவிகளும் வழங்கினார். அதன் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் திருவானைக்கோவிலில் நடந்த விழாவில் பங்கேற்று நலத்திட்டங்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்-அமைச்சர்  வருகையால் அ.திமு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அவரை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.


No comments:

Post a Comment