பள்ளிகளில் நாளிதழ்கள் வாங்குவதற்கான பணம் "ஸ்வாகா'


கம்பம்: பள்ளிகளில், மாணவர்களின் பொது அறிவை வளர்க்கவும், நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளவும், நாளிதழ்கள் மற்றும் புத்தகங்கள் வாங்க, வழங்கும் 10 ஆயிரம் ரூபாயை, பெரும்பாலான பள்ளிகள், "ஸ்வாகா' செய்வதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆறு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர், பொது அறிவு, அன்றாட நிகழ்வுகள், அரசியல், கல்வி, நிர்வாகம் குறித்து தெரிந்து கொள்ள, தினமும் நாளிதழ்கள் படிப்பது அவசியம். இதற்காக, உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளுக்கு, மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தில், ஆண்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. முன்னணி நாளிதழ்களை வாங்கி, மாணவ, மாணவியரை படிக்க வைக்க வேண்டும் என்பது உத்தரவு. ஒரு சில பள்ளிகள் மட்டுமே, இதை கடைபிடிக்கின்றன. பல பள்ளிகளில், ஏதாவது ஒரு நாளிதழை மட்டும் வாங்குவதும்; சில பள்ளிகளில், தலைமையாசிரியர் வீடு, அவர்களின் உறவினர்கள் வீடுகளுக்கும் நாளிதழ்கள் செல்கின்றன. பெரும்பாலான பள்ளிகளில், நாளிதழ்கள் வாங்காமல், அரசு பணம், "ஸ்வாகா' செய்வதும் நடக்கிறது. முதன்மைக் கல்வி அலுவலர், இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment