திருச்சி - தா.பேட்டையில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் திடீர் தர்ணா போராட்டம்

செப். 12-
தா.பேட்டை உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தா.பேட்டை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் அரசு அறிவித்த ஊதியம் நிர்ணயம் செய்த ஓய்வூதிய பணப்பயன்கள் வழங்கும்படி உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தனர்.

மேலும் இதுகுறித்து திருச்சியில் நடைபெற்ற குறைதீர் நாளில் கலெக்டரிடம் நேரில் சென்று மனு அளித்தனர். கலெக்டர் ஜெயஸ்ரீ விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் தா.பேட்டை கிளையின் சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெய்ஹிந்த், வட்ட ஆலோசனை குழு உறுப்பினர் ராமன், வட்ட செயலாளர் தியாகராஜன், மாவட்ட செயலர் ஆறுமுகம் மற்றும் பலர் உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்திற்கு சென்று ஓய்வூதியர்களின் பணப்பயன் பற்றி பணியில் இருந்த கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் கேட்டு உள்ளனர். அதற்கு அவர் உரிய பதில் கூறாமல் ஓய்வுபெற்ற ஆசிரியர்களை அலட்சியப்படுத்தி பேசியுள்ளார்.

இதனால் ஆவேசம் அடைந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் பணப் பயன்களை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களிடம் அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரியும் அலுவலகத்தின் தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த உதவி தொடக்கக்கல்வி அலுவலர் மாலதி உடனடியாக அலுவகத்திற்கு விரைந்து வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.



No comments:

Post a Comment