கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகப்பெரிய பள்ளி.


இப்பள்ளியில் 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 2010-11-ம் ஆண்டின் கல்வியாண்டு வரை தோரயமாக 39,437 மாணவர்கள் படித்துவருவதாகவும், இந்த கல்வியாண்டி இது 45 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்க்கையை எட்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


லக்னோ: உலகின் மிகப்பெரிய பள்ளியாக கின்னஸ் சாதனை படைத்துள்ளது உ.பி.மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளி. உ.பி. மாநிலம் லக்னோவில் சிட்டி மான்டெஸ்சோரி (சி.எம்.எஸ்) என்ற பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளி கடந்த 2010-2011-ம் ஆண்டு கல்வியாண்டு நிலவரப்படி 39 ஆயிரத்து 437 மாணவர்களுடன் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. 
இது குறித்த கின்னஸ் புத்தக வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது: கடந்த 1959-ம் ஆண்டு ஜெகதீஷ்காந்தி, பாரதி காந்தி ஆகியோர் , ரூ. 300 முதலீட்டில், வாடகை கட்டடத்தில் 5 மாணவர்களுடன் சி.எம்.எஸ்.பள்ளி துவக்கப்பட்டது. 

2002-ம் ஆண்டு ஐ.நா.வின் அமைதிக்கல்விக்கான கவுரவ சிறப்பு விருதும் பெற்றது.இதைத்தொடர்ந்து பள்ளியின் சிறப்பான நிர்வாகத்தினாலும், கல்விகற்று தரும் தரத்தினாலும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போதைய நிலவரப்படி இப்பள்ளியில் 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 2010-11-ம் ஆண்டின் கல்வியாண்டு வரை தோரயமாக 39,437 மாணவர்கள் படித்துவருவதாகவும், இந்த கல்வியாண்டி இது 45 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்க்கையை எட்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இப்பள்ளியே உலகின் மிகப்பெரிய பள்ளியாக கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக அடுத்த ஆண்டு (2013) வெளியாக உள்ள கின்னஸ் புத்தகத்தின் 57-வது பதிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளி நிர்வாகி ஜெகதீஷ்காந்தி கூறுகையில், உலக அளவில் எங்களது பள்ளிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது பள்ளிக்கு பெருமை என்றார். கி்ன்னஸ் சாதனையை பள்ளி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் சிறப்பாக கொண்டா உள்ளோம் என பள்ளியின் செய்தி தொடர்பாளர் ரிஷிகான்தெரிவித்தார்.

No comments:

Post a Comment