சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை.

பரிசு வழங்குவதாக எஸ்.எம்.எஸ்.,
அனுப்பி பணம் பறிக்கும் கும்பல்.


ஆத்தூர்: பரிசு விழுந்துள்ளதாக, மொபைல் ஃபோன்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி, பணம் பறிக்கும் கும்பலிடம், மொபைல் ஃபோன் உபயோகிப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சைபர் கிரைம் போலீஸார், எஸ்.எம்.எஸ்., அனுப்பி வருகின்றனர்.மொபைல் ஃபோன்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, பரிசு மற்றும் விருது வழங்குவதாக, எஸ்.எம்.எஸ்., அனுப்புகின்றனர்.

 தொடர்ந்து வாடிக்கையாளரின், பெயர், முகவரி மற்றும் வங்கி கணக்கு எண் போன்ற விபரங்களை கேட்டு, ஆன்லைன் மூலமாக, மொபைல் வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் இருந்து, பணம் எடுத்துக் கொண்டு, பரிசு வழங்காமல் ஏமாற்றுகின்றனர்.சேலம், அரிசிபாளைத்தை சேர்ந்த கோபி என்பவர், இது போன்ற எஸ்.எம்.எஸ்., நம்பி, கடன் வாங்கி, வங்கியில் செலுத்தி ஏமாற்றம் அடைந்தார். இதனால் மனமுடைந்த அவர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதே போல, பலரும் மோசடி எஸ்.எம்.எஸ்.,களை நம்பி, பணத்தை இழந்து வருகின்றனர்."இவ்வாறான மோசடி எஸ்.எம்.எஸ்.,களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், பரிசு மற்றும் விருது வழங்குவதாக வரும், எஸ்.எம்.எஸ்.,களை, அழித்து விட வேண்டும்' என தமிழக, சைபர் க்ரைம் போலீஸார், அனைத்து மொபைல் ஃபோன்களுக்கும் எச்சரிக்கை செய்து, எஸ்.எம்.எஸ்., அனுப்பி வருகின்றனர்.

No comments:

Post a Comment