தொடக்கக்கல்வி - 2012ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் பேரறிஞர் அண்ணா மற்றும் காமராஜர் அவர்களின் விருதுகளுக்கான தகுதியான விண்ணப்பங்கள் அனுப்ப கோருதல்.

தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் ந.க.எண்.27526 / ஜே2 / 2012 நாள்.  11.2012.Higher Education - Equivalence of Degree – B.A, Communicative English degree awarded by the Madurai Kamaraj University as equivalent to B.A., English – Recommendation of Equivalence Committee – Orders issued. G.O.(1D) NO.333 HIGHER EDUCATION (H2) DEPARTMENT DATED.27.11.2012. பள்ளிக் கல்வி - பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவிகளின் பாதுகாப்பு - பள்ளி வளாகம், அதன் சுற்றுப்புறம் மற்றும் வாகனங்கள் பராமரித்தல் - பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் - ஆணை வெளியீடு

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்கு நிதி உதவி கோரும் விண்ணப்பம். தமிழகஅரசு வெளியீடு.

CLICK HERE TO DOWNLOAD

டிசம்பர் 30ம் தேதி குரூப் 1 தேர்வு-

18-11-2012.

சென்னை: இருபத்து நான்கு காலியிடங்களை நிரப்புவதற்கான, குரூப்-1 தேர்வு, டிசம்பர் 30ம் தேதி நடக்கிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,), துணை ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள, 24 இடங்களை நிரப்புவதற்கான, குரூப்-1 போட்டித் தேர்வு, வரும் டிசம்பர் மாதம் 30ம் தேதி நடைபெற உள்ளது.
தகுதியுள்ள பட்டதாரிகள், அரசு பணியாளர் தேர்வாணையத்தின்,www.tnpsc.gov.in. என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

பள்ளிகளில் ஆலோசனை பெட்டி: பள்ளி கல்வி இயக்குனர்.

பள்ளிகளில் ஆலோசனை பெட்டி வைக்க பள்ளிகல்வி இயக்குனர் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.
மாணவ - மாணவிகள் தங்களின் குறை / நிறைகளையும் மற்றும் அவர்களுக்கு பள்ளிகளில் ஏற்படும் பிரச்னைகளையும்  தெரிவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறையை அனைத்து வகை மாணவ, மாணவியர்கள் தவறாது பின்பற்ற வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் .கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

NATIONAL INTEGRATION DAY ON 19TH NOVEMBER. SCHOOLS SHOULD TAKE THE PLEDGE AT 11.00 am. தொடக்கக் கல்வி - தனியார் உதவி பெறும் பள்ளிகள் - சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற பள்ளிகள் - குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ன்படி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவரை ஆசிரியர்களாக நியமிக்க இயக்குனர் உத்தரவு. தமிழ்நாடு தொடக்க கல்வி இணை இயக்குனரின் ( உதவி பெறும் பள்ளிகளில் ) செயல் முறைகள் ந.க.எண் :- 37718/எப்2/11 நாள் :- 15.11.2012.

D.T.Ed., பட்டய படிப்பு +2 கல்வித் தகுதிக்கு இணையானது: உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

D.TEd பட்டய படிப்பு பனிரெண்டாம் வகுப்புக்கு இணையானது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அறிவித்துள்ளது.
இரண்டு வருட ஆசிரியர் பயிற்சியான D.TEd பட்டய படிப்பானது +2 படிப்புக்கு இணையாகவே கருதப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஆசிரியர் பதவிக்கு 10ம் வகுப்பு + D.TEd + பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு மட்டுமே முறையான ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் விரிவான தகவல்களுக்கு அறிய இங்கே கிளிக் செய்யவும்.

ஆசிரியர் தகுதி மறுதேர்வு: ஒரு வாரத்துக்குள் இறுதி தேர்வுப் பட்டியல்.


ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதி தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசிரியர் தகுதி மறுதேர்வு அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 6.56 லட்சம் பேர் பங்கேற்ற இந்தத் தேர்வில், 19,246 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 6,7,8,9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் உரிய தகுதியுடையவர்களின் விவரங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, இறுதித் தேர்வுப் பட்டியல் ஒரு வார காலத்துக்குள் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் 20,525 பட்டதாரி ஆசிரியர்களும், 7,500 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட இருந்தனர். ஆனால், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, ஆசிரியர் தகுதி மறுதேர்வு அக்டோபர் 14ஆம் தேதி நடத்தப்பட்டது. இடைநிலை ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அண்ணாமலை பல்கலைக்கழகம் 21-ம் தேதி மீண்டும் திறப்பு: துணைவேந்தர் தகவல்.


சிதம்பரம், நவ. 17-

அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை-11-11-2012.

சிதம்பரம்: நிதி நெருக்கடி காரணமாக தவித்து வரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நடக்க இருந்த தேர்வுகள் அனைத்தும் மறு தேதியின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக துணைவேந்தர் ராமநாதன் கூறியதாவது: நிதி நெருக்கடி காரணமாக தற்போது பல்வேறு தகவல்கள் ஊழியர்கள் மத்தியில் புரளியாக பேசப்படுகிறது. நிர்வாகத்தில், கண்டிப்பாக ஆள் குறைப்பு இல்லை. நிதி நிலை மோசமாக இருப்பதால், சம்பளம் கொடுப்பதில், சிக்கல் இருந்து வருகிறது.

மாணவரே இல்லாத அரசு பள்ளி தலைமை ஆசிரியர் இடைநீக்கம்-11-11-2012.

ஆத்தூர்: மாணவர்களே இல்லாமல் இயங்கி வந்த, நகராட்சி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரை, மாவட்ட கல்வி அலுவலர், பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி, வடக்கு காடு சக்தி நகர் பகுதியில், 1966ம் ஆண்டு முதல், நகராட்சி தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, படிக்கும் மாணவர்களுக்கு ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் என, இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்தனர்.
ஏப்ரல் அல்லது ஜுனில் அடுத்த டி.இ.டி தேர்வு.

சென்னை: "டி.இ.டி., மறுதேர்வு முடிவு, வெளியிடப்பட்ட நிலையில், தகுதி மதிப்பெண் குறைப்பிற்கு வாய்ப்பு கிடையாது" என, துறை வட்டாரங்கள், உறுதியாக தெரிவித்தன. அடுத்த டி.இ.டி., தேர்வு, ஏப்ரல் அல்லது ஜூனில் நடக்கும் எனவும், துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிக்கல்வித்துறை - ஆசிரியர்களுக்கு சேர வேண்டிய பண, பணி மற்றும் இதர பலன்களை உரிய நேரத்தில் பெற அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க அனைத்து கல்வி அலுவலங்களிலும் சிறப்பு ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம் திட்டத்தை அறிமுகப்படுத்துதல் - ஆணை வெளியீடு.


தொடக்கக் கல்வி - வழக்குகள் நிலுவை விவரம் கோரி இயக்குனர் உத்தரவு.தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 2200 / DD(L)/ 2012, நாள்.    .11.2012 


இதில்  நிலுவையில்  உள்ள வழக்கு சார்ந்த விவரங்களை எதிர்வரும் 2 & 3.11.2012 அன்று நடைபெறவுள்ள ஆய்வுக்கூட்டத்திற்கு பணிந்தனுப்பிட மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.


என்.எம்.எம்.எஸ்., தேர்வுக்கு (NATIONAL  MEANS CUM MERIT SCHOLARSHIP EXAMINATION 2012 - 13)  இன்று முதல் விண்ணப்பம்.1.11.2011. to 9.11.2012. 

மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

The amount of scholarship will be Rs.500/- per month. (As per M.H.R.D. Guidelines)

கல்வித் தகுதி: 2011-12ம் கல்வியாண்டில் 7ம் வகுப்பு பயின்று முழு ஆண்டுத் தேர்வில், பொதுப்பிரிவு மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்களும்,  எஸ்சி. எஸ்டி மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: என்.எம்.எம்.எஸ்., தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பப் படிவத்தை இணையதளத்தில் இன்று 1.11.2012 முதல் 9.1102012 ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் விரிவான தகவல்கள் அறிய www.dge.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.


தொடக்கக் கல்வி - 2013-14 ஆம் கல்வியாண்டில் அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவிகளின் விலையில்லா சீருடைகள் வழங்குவது குறித்து விவரம் கோரி இயக்குநர் உத்தரவு. தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 19517 / கே3 / 2012, நாள். 01.11.2012.   


அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் ரூ.5000 /- ஆக உயர்த்தியும், 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணியினை முடித்த அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பரிசுத்தொகை ரூ.2000/- ஆக உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவு.