மாணவர்களே தாழ்வு மனப்பான்மை உள்ளவரா நீங்கள்?

பெரும்பாலான மாணவர்கள் தன்னை பற்றி மனதில் நான் இப்படி தான்? எனக்கு திறமையில்லை? என்னால் முடியாது? .... என்ற தாழ்வான கருத்து மனதில் ஆழமாக பதிந்திருக்கும். அவ்வாறு நினைப்பது நம் முன்னேற்றத்திற்கு தடை போடும் முட்டுகட்டைகளாகும். தம்மால் அனைத்தும் சாதிக்க முடியும்....என்ற உயர்வான எண்ணங்களை எப்போதும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் அடைய விரும்பும் இலக்கை சுலபமாக எட்ட முடியும்.
தாழ்வு மனப்பான்மை நீக்கும் வழிகள்:

* நேர்மறை எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* தடைகளைக் கற்பனை செய்ய கூடாது.
* உங்களை நீங்கள் எப்போதும் தாழ்வாக நினைக்க கூடாது.
* உங்கள் நலனில் அக்கறையுள்ள நல்ல ஆலோகரை அடிக்கடி கலந்து ஆலோசியுங்கள்.
* தன்னம்பிக்கையை வளர்க்கும் புத்தகங்களை வாங்கிப் படியுங்கள். இந்த உலகில் தன்னம்பிக்கையினால் உயர்ந்தவர்கள் ஏராளம். அவர்களைக் குறித்தும், வளர்ந்த விதத்தை குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள்.
* உங்களைச் சுற்றியுள்ளவர்கள் வாழ்க்கை ஏணியில் எப்படி ஏறி, உச்சிக்குச் சென்றார்கள் என்று அறிந்து, அவர்கள் பின்பற்றிய வழிகளில் சிறந்தவற்றைப் பின்பற்றுங்கள்.
* நேர்மறை எண்ணம் உள்ள நண்பர்களோடு பழகுங்கள்.
* சுய முன்னேற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளுங்கள்.
* எக்காரணத்தைக் கொண்டும் ஆணவத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்.
* பணிவு, துணிவு, கனிவு என்ற தாரக மந்திரத்தைப் பின்பற்றுங்கள்.
அப்பரம் என்ன? வாழ்வில் பெறும் வெற்றிகள் எல்லாம் உங்களுடையதாக இருக்கும்.

No comments:

Post a Comment