375 பள்ளிகள் சி.பி.எஸ்.இ. கல்வி திட்டத்துக்கு மாற முடிவு.

மதுரை : தமிழகத்தில் 13 ஆயிரம் தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் அதிகளவில் கல்வி கட்டணம் வசூல் செய்வதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 2009ல் கல்வி கட்டணத்தை சீராய்வு செய்ய குழு போடப்பட்டு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட அவர்கள் இஷ்டத்திற்கு வழக்கம்போல் பல ஆயிரக்கணக்கான ரூபாயை மாணவர்களிடம் கல்வி நிறுவனங்கள் பினாமி பெயரில் வசூல் செய்கின்றனர். இதனால் பெற்றோர்களுடனான மோதல் தொடர்ந்து நீடிக்கிறது. 

சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தியதால் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை வசூல் செய்வதில் மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 375 பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளியாக செயல்பட தடையில்லா சான்று கேட்டு தமிழக அரசிடம் விண்ணப்பித்துள்ளன. அனுமதி கிடைத்தவுடன் சிபிஎஸ்சி பாடம் எடுக்கப்படும்.

No comments:

Post a Comment