நாலந்தா பல்கலை.க்கு யுனெஸ்கோ கவுரவம் : நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். 


ராஜ்கிர் : யுனெஸ்கோ பாரம்பரிய இடங்கள் பட்டியலில், நாலந்தா பல்கலைக்கழகமும் இடமபெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். பீகார் மாநிலத்தில் உலகப் பிரசித்தி பெற்ற நாலந்தா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அந்த பல்கலைக்கழகத்தில், பார்லிமென்ட் கன்சல்‌டேட்டிவ் குழு ஆய்வு நடத்தி வருகிறது. இக்குழுவில், மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், முதல்வர் நிதீஷ் குமார் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு, நாலந்தா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. அப்போது அமைச்சர் குர்ஷித் கூறியதாவது, தொன்மை சிறப்பு கொண்ட இந்த நாலந்தா பல்கலைக்கழக வளர்ச்சிக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு, பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடங்கள் உள்ளிட்டவைகள் அமைக்கப்படும் என்றும், பல்கலைக்கழகம், யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் இடம்பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ம்த்திய அரசு சார்பில் எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.




1 comment:

  1. எங்களுக்குத் தேவையான பல செய்திகள் நன்றி

    ReplyDelete