பெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணி வாய்ப்பு.

பெல் நிறுவனத்தின் இன்ஜினியரிங் காலி இடங்கள் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 80ம், மெக்கானிகலில் 25ம், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஐ.டி.,யில் 45 என்ற அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

இந்திய ராணுவத்தின் எலக்ட்ரானிக் தொழில் நுட்பத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனம் 1954ல் பெங்களூருவில் முதலில் நிறுவப்பட்டது.
பின் நாட்களில் இது பல்பொருள், பல்வேறு தொழில் நுட்பம், பல்வேறு கிளைகளைக் கொண்ட நிறுவனமாக பரிணாம வளர்ச்சி கண்டு தற்போது இந்தியாவிலும், சர்வ தேச நாடுகளிலும் இடம் பெற்றுள்ளது. ரேடார்கள், ராணுவ தகவல்பரிமாற்றம், நேவல் சிஸ்டம், எலக்ட்ரானிக் வார்பேர் சிஸ்டம், டெலிகம்யூனிகேஷன், சவுண்ட் அண்டு விஷன் பிராட்காஸ்டிங், ஆப்டோஎலக்ட்ரானிக்ஸ், டேங்க் எலக்ட்ரானிக்ஸ், சோலார் போட்டோ வோல்டாயிக் சிஸ்டம், எம்பெட்டட் சாப்ட்வேர், எலக்ட்ரானிக் காம்போனண்ட் போன்ற பல்வேறு பிரிவுகளிலான சேவையைத் தந்து வருகிறது. இந்த நிறுவனத்தில் உள்ள இன்ஜினியரிங் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்
பெல் நிறுவனத்தின் இன்ஜினியரிங் காலி இடங்கள் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 80ம், மெக்கானிகலில் 25ம், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஐ.டி.,யில் 45 என்ற அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
தேவைகள்
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேற்கண்ட இன்ஜினியரிங் விண்ணப்பிப்பவர்கள் பி.இ., பி.டெக்., அல்லது பி.எஸ்.சி., இன்ஜினியரிங் பட்டப் படிப்பை தொடர்புடைய பிரிவில் படித்திருக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், டெலிகம்யூனிகேஷன், மெக்கானிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் படித்திருக்க வேண்டும் என்பதை கவனிக்கவும்.
ஏ.எம்.ஐ.இ., ஏ.எம்.ஐ.இ.டி.இ., முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த ஆண்டு ஜூன்/ஜூலை மாதவாக்கில் இறுதித் தேர்வை எதிர்கொள்ள இருப்பவர்களும் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்தப் பணி இடங்கள் கேட் தேர்வு அடிப்படையில் நிரப்பப்படும் என்பதால் அந்தத் தகுதி இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
இதர தகவல்கள்: பெல் நிறுவனத்தின் இன்ஜினியரிங் பதவிக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் முறையிலேயே பதிவு செய்ய வேண்டும். முதலில் பின்வரும் இணையதளத்திற்கு சென்று தகுதி மற்றும் இதர தேவைகளை முழுமையாக அறியவும். இதன் பின்னரே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 18.03.2013.
இணையதள முகவரி : hzzp://jobapply.in/BEL2013GATE/

No comments:

Post a Comment