தமிழ் வளர்ச்சித் துறைக்கு தனி வலைதளம்: முதல்வர்.

சென்னை, பிப்.21 - தமிழ் வளர்ச்சித் துறைக்காக உருவாக்கப்பட்ட www.tamilvalarchithurai.org  என்ற புதிய வலைதளத்தை  தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா  நேற்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்

.
தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா  தமிழ் வளர்ச்சித் துறைக்கென தனி வலைதளம் இல்லாத குறையினைப் போக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறைக்கென புதிய வலைதளம் உருவாக்கிட ஆணையிட்டிருந்தார். அதன் அடிப்படையில் 2012 -​2013 ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையில், தமிழ் வளர்ச்சித் துறைக்கென 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தனியாக ஒரு வலைதளம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தமிழ் வளர்ச்சித் துறைக்காக உருவாக்கப்பட்ட www.tamilvalarchithurai.org  என்ற புதிய வலைதளத்தை  தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.  இந்த வலைதளத்தில், தமிழ் வளர்ச்சித் துறையால்  மேற்கொள்ளப்பட்டு வரும் ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கப் பணிகள், தமிழ் வளர்ச்சி தொடர்பான திட்டங்கள், நாட்டுடைமை ஆக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் விவரம், ஆட்சிச் சொல்லகராதி, தமிழ் வளர்ச்சித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு, தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் விருதுகள் மற்றும் அவற்றைப் பெற்ற தமிழறிஞர்கள் விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அனைவரும் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இடம்பெற்றுள்ளன. மேலும், தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் சிறந்த நூலுக்கான பரிசு, நூல் வெளியிட நிதியுதவி, அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி, தமிழறிஞர்களுக்கு நிதி உதவி  போன்ற திட்டங்களுக்கான விண்ணப்பப் படிவங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் இந்த வலைதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில்,  பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், சட்டம், nullநீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர்,  செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர்,  இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர்  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment