சத்துணவு மாணவர்களுக்கு 13 வகை உணவுகள் இன்று தமிழ்நாட்டில் உள்ள 32 வட்டாரங்களில் அமல்படுத்தப்பட்டது.
சென்னை, மார்ச். 20-
தமிழ்நாட்டில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் மற்றும் 
அங்கன்வாடி பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு 
அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் 13 வகையான
 உணவையும், 4 வகை முட்டை மசாலாக்களும்
 வழங்கப்படும் என மாண்புமிகு  முதல்-அமைச்சர்
 ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.


இந்த திட்டம் இன்று தமிழ்நாட்டில் உள்ள 32 
வட்டாரங்களில் அமல்படுத்தப்பட்டது. நுங்கம்பாக்கம்
 மாநகராட்சி பள்ளியில் அமைச்சர் வளர்மதி மாணவர்களுக்கு
 உணவு வழங்கினார்.


புதிய திட்டத்தின்படி ஒவ்வொரு மாதமும் முதல்
 மற்றும் 3-வது வாரங்களில் திங்கட்கிழமை
 தோறும் காய்கறி பிரியாணி மற்றும் மிளகு
 தூள் முட்டை, செவ்வாய்கிழமைகளில் கொண்டை
 கடலை புலவு, மற்றும் தக்காளி முட்டை மசாலா,
 புதன்கிழமை தோறும் தக்காளி சாதம் மற்றும் மிளகு
 தூள் முட்டை வழங்கப்படும்.
வியாழன் தோறும் சாதம், சாம்பார், மற்றும் வேக
 வைத்த முட்டை, வெள்ளி தோறும் கருவேப்பிலை
 சாதம் அல்லது கீரை சாதம், முட்டை மசாலா
 மற்றும் மிளகாய் பொடியில் வறுத்த உருளைக்
கிழங்கு ஆகியவை வழங்கப்படும்.

இரண்டாம் மற்றும் 4-ம் வாரங்களில் திங்கட்கிழமை 
தோறும் சாம்பார் சாதம் மற்றும் வெங்காயம்,
 தக்காளி முட்டை மசாலா,

 செவ்வாய் கிழமை தோறும் மீல்மேக்கர், காய்கறி 
கலவை சாதம் மற்றும் மிளகு தூள் முட்டை,

 புதன்கிழமை தோறும் புளியோதரை மற்றும்
 தக்காளி முட்டை மசாலா.

வியாழக்கிழமை தோறும் லெமன் சாதம், தக்காளி 
முட்டை மசாலா மற்றும் சுண்டல்,

 வெள்ளி தோறும் சாதம், சாம்பார், வேக வைத்த
 முட்டை மற்றும் உருளைக்கிழங்கு பொறியல்
 வழங்கப்படும்.


சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் 
ஒரு வட்டாரம் வீதம் 32 வட்டாரங்களில்
 இன்று முதல் தொடங்கியுள்ளது. இத்திட்டம்
 படிப்படியாக மற்ற வட்டாரங்களுக்கும் 
விரிவுபடுத்தப்படும்.

இந்நிகழ்ச்சியில் மேயர் சைதை துரைசாமி,
 கமிஷனர் விக்ரம்கபூர் மற்றும் உயர் அதிகாரிகள்
 கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment