முதன்மை நிலை விளையாட்டு மையத்தில்சேர விண்ணப்பங்கள் வரவேற்பு.


திருவள்ளூர்:முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் சேர்வதற்கு மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழக அரசு, 2011ம் ஆண்டு, சென்னையில் முதன்மை நிலை விளையாட்டு மையத்தை துவக்கிஉள்ளது. மாணவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மையம் நேரு விளையாட்டரங்கிலும், மாணவியர்களுக்கான மையம் நேரு உள்விளையாட்டு அரங்கிலும் செயல்பட்டு வருகிறது.

இவ்விளையாட்டு விடுதியில், 10 முதல், 14 வயதுக்குட்பட்ட திறமை வாய்ந்த தலா, 25 சிறுவர், சிறுமியர் அனுமதிக்கப்படுவர். இவர்களுக்கு தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் சேர்வதற்கு உரிய தேர்வு போட்டிகள், மே, 7ம் தேதி, நேரு விளையாட்டரங்கில், தடகளம் மற்றும் இறகுப் பந்து விளையாட்டுக்கள் நடைபெற உள்ளது.

இதில் சேர விரும்பும் மாணவ, மாணவியர், விண்ணப்ப படிவங்களை 10 ரூபாய் செலுத்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அரங்கம், ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம், திருவள்ளூர் என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் ஏப்., 25ம் தேதி, இத்தகவல், ஆட்சியர் வீர ராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment