பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்.


கர்நாடகாவில் நடந்து முடிந்த தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்.

மொத்தமுள்ள 224 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போது, காங்கிரஸ் கட்சி 117 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 3 இடங்களில் முன்னிலையில் உள்ளது. எனவே, பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்க உள்ளது காங்கிரஸ்.
காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ள நிலையில், முதல்வர் பதவிக்கு பல பெயர்கள் அடிபடுகிறது. எனினும், காங்கிரஸ் உயர்மட்டக் குழுவே முதல்வரை தேர்வு செய்யும் என்று கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் காலை முதலே வெற்றிக் கொண்டாட்டங்கள் களைகட்டத் துவங்கிவிட்டது. தலைவர்கள் வாழ்த்துக்களை பரிமாறியும், தொண்டர்கள் இனிப்புகளை வழங்கியும், அலுவலக வாயில்களில் பட்டாசுகளைக் கொளுத்தியும் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளக் கட்சிகள் இரண்டுமே தலா 40 தொகுதிகளைப் பெற்று சம பலத்துடன்  உள்ளதால் எதிர்க்கட்சி வரிசையைப் பிடிப்பதில் இருக் கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
பாஜகவில் இருந்து பிரிந்து சென்ற எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி 8 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
இதரக் கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் 14 இடங்களைப் பிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment