மதுரையில் பள்ளிகள் நேரம் மாற்றம்? 
இன்று முக்கிய ஆலோசனை.

மதுரை:மதுரையில், பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைப்பது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனை கூட்டம் இன்று (ஜூன் 7) நடக்கிறது.
சென்னை, மதுரை, கோவை உட்பட முக்கிய நகரங்களில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதனால், காலை 9.30 மணிக்கு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மூச்சு முட்டும் நிலையில், பஸ்கள், ஆட்டோக்களை பிடித்து பள்ளிக்கு ஓட வேண்டியுள்ளது.சென்னையில், பஸ் படிக்கட்டில் நின்று பயணம் செய்த மாணவர்கள் 4 பேர், லாரி மோதி பலியான சம்பவம் தொடர்பாக போக்குவரத்து துறை சார்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பதிலில், ""சென்னையில் பள்ளிகள் வேலை நேரத்தை, காலை 7:30 மணியில் இருந்தும், கல்லூரிகள் வேலை நேரம், காலை 8 மணியில் இருந்தும் துவங்கும் வகையில் மாற்றியமைக்கலாம். இந்த நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றும் தெரிவிக்கப்பட்டது.சென்னையை போன்று மதுரையிலும் வாகனங்கள் நெருக்கடியால் போக்குவரத்து அவ்வப்போது பாதிக்கின்றது. இதனால், மதுரையிலும் பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இது குறித்து, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா கவனத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டது.இந்நிலையில், பள்ளிகள் நேரத்தை மாற்றியமைப்பது தொடர்பாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள், கல்வி துறை அதிகாரிகள், தனியார் பள்ளி முதல்வர்கள் மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம், கலெக்டர் தலைமையில் இன்று (ஜூன் 7) நடக்கிறது.

No comments:

Post a Comment