முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: விடைகள் வெளியீடு.

31 July 2013
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான முக்கிய விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின்www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த விடைகள் தொடர்பாக தேர்வர்களுக்கு ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் அதற்குரிய ஆதாரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
மொத்தம் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1.59 லட்சம் பேர் எழுதினர். இப்போது இந்தத் தேர்வுக்கான உத்தேச முக்கிய விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதற்கான ஆட்சேபணைகளைப் பரிசீலித்த பிறகு இறுதி விடைகளுடன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

No comments:

Post a Comment