RE - OPTION அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. G.O. 240 Dt.22.7.2013

    அதாவது 1.1.2006 டு 31.5.2009 இக்கு இடைப்பட்ட காலத்தில் தேர்வு/சிறப்பு நிலை எய்தியவர்கள், ஆறாவது ஊதிய குழு ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளும் போது தேர்வு/சிறப்பு நிலையில் ஊதியம் பெற்று கொண்ட பின்னர் புதிய ஊதிய விகத்தில் ஊதியம் நிர்ணயம் செய்து கொள்ள ஏற்கனவே வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்த்தது.

    உதாரணமாக பழைய ஊதிய விகிதத்தில் 1.7.2008 இல் ஒருவர் தேர்வு நிலை பெற்றிருந்தால், அவர் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்யும்போது, 1.1.2006 லேயே புதிய ஊதிய விகிதத்தில் ஊதியம் நிர்ணயம் செய்துகொள்ளாமல், 1.7.2008 வரை பழைய ஊதிய விகிதத்தில் இருந்து விட்டு தேர்வு நிலை பெற்ற பின்னர் புதிய ஊதிய விகிதத்தில் ஊதியம் நிர்ணயம் செய்து கொள்ள OPTION கொடுக்க முன்னரே வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. அதாவது தேர்வுநிலை பெற்ற பின்னர் ஊதியம் நிர்ணயம் செய்து கொள்வதால் 9300 இல் ஊதிய நிர்ணயம் செய்துகொண்டு தர ஊதியம் 4300 பெறலாம்.

   இந்த வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment