2030ம் ஆண்டுக்குள் 50% பேருக்கு மனநலம் 

பாதிக்கும்: உலக சுகாதார அமைப்பு.

ராமநாதபுரம்: "வரும் 2030 ம் ஆண்டுக்குள், உலகில் 50 சதவீதம் பேருக்கு மனநலம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது" என உலக சுகாதார மைய ஆய்வில், அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பள்ளி பருவத்திலேயே மாணவர்களிடம், மனநலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மனநலம் குறித்து பள்ளிகளில் சரிவர கற்றுத்தராததால், எளிதில் கோபப்படுவது; ஏமாற்றத்தால் தவறான முடிவுகளை எடுப்பது; சகிப்புத்தன்மை இல்லாமை போன்றவற்றால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதை தவிர்க்கும் வகையில், மதுரை எம்.எஸ்.செல்லமுத்து ஆராய்ச்சி மையம், பள்ளி மாணவர்களுக்கு, மனநலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
ராமநாதபுரம் எம்.ஜி., மெட்ரிக் பள்ளி மாணவர், ஆசிரியர், பெற்றோருக்கு உளவியல் இயக்குனர் ஜனார்த்தன் பாபு, மனநல ஆலோசகர் ராமு விழிப்புணர்வு முகாம் நடத்தினர். இதில், ராமு கூறியதாவது:
2030 ல், 50 சதவீதம் பேருக்கு மன நலம் பாதிக்க வாய்ப்பு உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதைத் தவிர்க்க, "மனநலம் என்றால் என்ன?&' என்பது குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
உடல் ரீதியாக ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்வது, பொருளாதாரம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள், போதைப் பழக்கம், என, மனபாதிப்புக்கு 54 விதமான காரணிகள் உள்ளன. இவைகளால் ஏற்படும் விளைவுகள் குறித்து, 8, 9, 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். மாணவர்களை எப்படி கையாள வேண்டும்? என்பது குறித்து ஆசிரியர், பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்" என்றார்.

No comments:

Post a Comment