தொடக்க கல்வி  இயக்குனரகத்தில் 
67 வது சுதந்திர தின விழா.

தொகுப்பு: www.aeeoassociation.blogspot.com

நன்றி       : உதவி தொடக்கக் கல்வி அலுவலர்                                     சங்கம் .
   


 

       நாம் தாய்த் திரு நாட்டின் 67 வது சுதந்திர தினவிழா தொடக்கக் கல்வி இயக்குனரகத்தில்  தொடக்கக் கல்வி  இயக்குனர் முனைவர் திரு  ஆர். இளங்கோவன் அவர்கள் தலைமையில்  சிறப்பாக நடைபெற்றது. பேண்ட் வாத்திய முழக்கங்களுடன் இயக்குனர் அவர்கள் நமது தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இணை இயக்குனர் திருமதி லதா அவர்களும் கலந்து கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்பித்தார். பின்னர் பள்ளி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இயக்குனர் அவர்கள் சுருக்கமாகவும் சிறப்பாகவும் சுதந்திர தின  உரை ஆற்றினார். 
   
    சீனர்கள் தேயிலை விலையேற்றத்தை குறைக்க மருத்ததாதால் கிழக்கிந்திய கம்பெனி உருவாகியது என்றும் ,அது பல நாடுகளில் வியாபாரம் செய்து வந்தது என்றும், வியாபாரம் செய்ய வந்தவர்கள் மெல்ல மெல்ல நாட்டையும் கைப்பற்றியதையும், பின்னர் பல்வேறு தியாகங்களுக்குப் பின் சுதந்திரம் பெற்றதையும்  சுவைபட தெரிவித்தார். 
கல்வித் துறையில் இந்திய அளவில் தமிழகம் முன்னிலையில் உள்ளதையும் குறிப்பிட்டார். 

பின்னர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார். 

  சென்னை எழும்பூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு ஆர். கணேசன்  விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் .
 எழும்பூர் சரகத்தை சார்ந்த அசம்ஷன் , புனித அந்தோணியார்,தனகோட்டி பள்ளியிகளை சேர்ந்த மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக வழங்கினர்.

     
         விழாவில் தொடக்கக் கல்வி நேர்முக உதவியாளர்,சென்னை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்,சென்னை மாவட்ட அனைத்து  உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், இயக்குனகரகப் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தால் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளும் இனிப்பும் வழங்கப் பட்டது.

விழாவில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு 
பேராசிரியர் கே.ராஜி எழுதிய "விஞ்ஞானிகள் வரிசை தேலீஸ் முதல் ராமகிருஷ்ணன் வரை " என்ற புத்தகத்தையம் ராமகிருஷ்ணா மடம் வெளியிட்ட  "மாணவர்களுக்கு "  என்ற புத்தகத்தையும் விழா மேடையிலேயே கையெழுத்திட்டு   இயக்குனர் அவர்கள்  வழங்கியது குறிப்பிடத்தக்கது.

விழாவில் கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்து நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவயுற்றது.








  

No comments:

Post a Comment