மதிய உணவுக்கு நிர்ணயித்த தொகை சாத்தியமற்றது: நாடாளுமன்றக் குழு.


ஒரு பாட்டில் தண்ணீர் விலையே 10 ரூபாய் என்றிருக்கும் நிலையில், மதிய உணவு ஒன்றுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள 3.11 முதல் 4.65 ரூபாய் என்ற தொகை நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்று நாடாளுமன்றக் குழு கூறியுள்ளது.

பெண்கள் முன்னேறத்துக்கான நிர்வாகக்குழு, மக்களவையில் சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மதிய உணவு ஒன்றுக்கு தொகை நிர்ணயிக்கும்போது, அதை நடைமுறைக்கு ஏற்புடையதாக நிர்ணயிக்க வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட தொகையிலும், நிர்ணயிக்கப்பட்ட உட்டச் சத்துக்களுடனும் மதிய உணவு வழங்கப்படுகிறதா என்பதை அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
மதிய உணவு திட்டத்தை அமல்படுத்துவதற்கு பள்ளி மற்றும் கல்வித் துறையும், மனித வள மேம்பாட்டுத் துறையும், உள்ளூர் நிர்வாக அமைப்புகளும் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தும் பிகாரில் 23 குழந்தைகள் இறந்த சம்பவம் நடந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.
இப்போதுள்ள குழுக்கள் இந்த திட்டத்தின் உண்மையான நோக்கத்தை அலட்சியப்படுத்தி வருவதையே இது காட்டுகிறது.
எனவே இக் குழுக்களை தொடர்ந்து கண்காணிப்பதுடன், நடைபெறும் தவறுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பையும் அவற்றுக்கு அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு கூறியுள்ளது.'

No comments:

Post a Comment