T.E.T.திண்டிவனத்தில் முதல் தாள்; திருநெல்வேலியில் இரண்டாம் தாள்.


செஞ்சியில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பதால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் செஞ்சி மாணவி ஒருவருக்கு, முதல் தாள் தேர்வு திண்டிவனத்திலும், இரண்டாம் நாள் தேர்வு திருநெல்வேலியிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வரும் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறவுள்ளது. இதில் 17-ம் தேதி முதல் தாளும், 18-ம் தேதி இரண்டாம் தாள் தேர்வுகளும் நடைபெறுகின்றன.
தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி, தங்கள் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்தவர்கள், அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். காரணம், செஞ்சி பகுதியைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பெரும்பாலானோருக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக, செஞ்சி பெரியகரம் வாசுதேவன் தெருவைச் சேர்ந்த எம்.ரமேஷ் என்பவருக்கு திருநெல்வேலி மாவட்டம் தென்காசி வட்டத்தில் உள்ள இலஞ்சி என்ற ஊரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
குளறுபடி... ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பதாரர்கள், தங்கள் விண்ணப்பத்தில் தேர்வு எழுத எந்த மையம் வேண்டும் என்பதை தெளிவாகக் குறிப்பிட்டும், இக்குளறுபடி நடைபெற்றுள்ளது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வு எழுதும் செஞ்சியைச் சேர்ந்த மாணவி ஏ.சத்தியாவுக்கு முதல் தாள் தேர்வு திண்டிவனத்திற்கும், இரண்டாம் தாள் தேர்வு திருநெல்வேலி மாவட்டம் தென்காசி பங்களோசுரண்டை என்ற ஊருக்கும் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
÷செஞ்சியில் இருந்து திருநெல்வேலிக்கு செல்ல 450 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும். செஞ்சியிலிருந்து காலையில் பயணம் மேற்கொண்டால் மாலை 5 மணிக்குதான் திருநெல்வேலிக்கு செல்ல முடியும்.÷இது நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயம்.

÷எனவே தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம், விரைவில் நடவடிக்கை எடுத்து, இது போன்று பாதிக்கப்பட்டோருக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே தேர்வு மையத்தை ஒதுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டோரின் கோரிக்கையாகும்.




No comments:

Post a Comment