குறைந்த செலவில் சமையல் எரிவாயு தயாரிக்கும் திட்டம்: பள்ளி மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் பரிசு.

அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சி போட்டியில் கரூர் பரணி பார்க் மெட்ரிக் பள்ளி மாணவிகள் உருவாக்கிய குறைந்த செலவில் சமையல் எரிவாயு தயாரிக்கும் திட்ட மாதிரிக்கு முதல் பரிசும், தங்கப்பதக்கங்களும் கிடைத்துள்ளன.

சென்னையை அடுத்த தாளாம்பூர் அக்னி பொறியியல் கல்லூரியும்,இந்திய அறிவியல் சங்கமும் இணைந்து அண்மையில் தென்மண்டல பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சிப் போட்டிகளை நடத்தின.
தமிழகமெங்கும் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 41 மாணவர்கள் உருவாக்கிய திட்ட மாதிரிகள் கண்காட்சியில் இடம்பெற்றன. கரூர் பரணி பார்க் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 1 பயிலும் மாணவிகள் எஸ்.பிரதீபா,எஸ்.தாரிணி உருவாக்கிய குறைந்த செலவில் சமையல் எரிவாயு தயாரிக்கும் திட்ட மாதிரி முதல் பரிசு பெற்றது.
இந்திய கடல் ஆய்வு நிறுவன திட்ட இயக்குனர் ஆர். வெங்கடேசன் மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்களை வழங்கினார். விழாவில் இந்திய அறிவியல் சங்கத் தலைவர் நாராயண் அய்யர், அக்னி பொறியியல் கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர் ஜனார்த்தனன் மேனன், கல்லூரி முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment