நன்றி                                   நன்றி                        நன்றி 

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கோரியது உள்ளிட்ட சில காரணங்களினால், சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஒன்றிய ஆசிரியர் திரு. இராம்குமார் (T.A.T.A. மாவட்ட செயலாளர்)  அவர்கள் மீது, உதவி தொடக்க கல்வி அலுவலர் அவர்கள் எடுத்த  நடவடிக்கையான 17 A  யின் கீழ் மூன்றுமாத ஊதிய உயர்வு நிறுத்தம் - தற்போது மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அவர்களால் இரத்து  செய்யப்பட்டுள்ளது. அதன் நகலை உங்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ளோம்.

   சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அவர்களுக்கு நன்றி கூறுகிறோம். 

                     
                     
              
திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றியத்தில் இன்று 12.12.13 இல் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க (T.A.T.A.)  கிளை இனிதே தொடக்கம்.

தேவகோட்டை சேர்மன் மணிக்க வாசகம் நடுநிலை பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி ) முன்மாதிரி பள்ளி என தினத்தந்தி இளைஞர் மலர் அட்டை படம் மற்றும் பள்ளி தொடர்பான கட்டுரை

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு தொடர்பான வழக்கில் வருகிற செவ்வாய்கிழமை உத்தரவு

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (TATA) சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் சுப்பையா அவர்களின் முன்னிலையில் பத்தாவது வழக்காக விசாரணைக்கு வந்தது. ஆசிரியர்கள் சார்பில் வழக்கறிஞ்சர் அஜ்மல் கான் அவர்கள் வாதிட்டார்.
அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது, ஆனால் எதிர் தரப்பு வழக்கறிஞ்சர் ஏற்கெனவே அரசு தரப்பில் கூறப்பட்ட அனைத்து ஆதாரங்களும் தெளிவாக எடுத்து உரைத்தார், ஆகையால் இனி கால அவகாசம் தர கூடாது என வாதம் எடுத்து வைக்கப்பட்டது. இதையடுத்து வருகிற செவ்வாய்கிழமை அன்று உத்தரவு போடுவதாக நீதியரசர் கூறியுள்ளதாக தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் திரு.கிப்சன் தெரிவித்தார்.

ஐகோர்ட்டில் 268 பணியிடம்: பிப்., 23ல் எழுத்து தேர்வு.

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில், 268 பணியிடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பிப்ரவரி 23ல் நடக்கிறது.
பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் 
கோரிக்கை பேட்ஜ் அணிந்து பணி
Dec.5
விழுப்புரம் : 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் நேற்று முதல் கோரிக்கை பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
         Photo

படிக்கட்டு பயணத்தைத் தடுக்கும் கருவி: பள்ளி மாணவர் கண்டுபிடிப்புக்குப் பரிசு.

தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 3 பிளஸ் டூ மாணவர்கள், படிக்கட்டில் பயணம் செய்வதைத் தடுக்க புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி உள்ளனர்.
பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவு.
சென்னை: சென்னையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ளேயும் வெளியேயும் கண்காணிப்பு கேமரா பொருத்த பள்ளிகளுக்கு சென்னை போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். சென்னையில் நடந்த பள்ளி நிர்வாகிகளுடனான கூட்டத்தில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டது. ஜனவரி 7ம் தேதிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். கேமரா பொருத்திவிட்டு அருகில் உள்ள போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் தெரிவித்து சான்று பெற வேண்டும். பள்ளிக்குழந்தைகள் பாதுகாப்புக்கு மாணவர் பாதுகாப்பு பிரிவை உருவாக்க வேண்டும். மாணவர்களின் பெயர்ப்பட்டியல் மற்றும் மாணவர்களை அழைத்து வரும்தனியார் வாகன ஓட்டுகளின் விபரங்களை சேகரிக்கவும் பள்ளி நிர்வாகிகளுக்குபோலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.