3-ஆம் வகுப்பிற்கு அடைவு ஆய்வு - கள ஆய்வாளர் வழிகாட்டு நெறிமுறை

 

நீதி மன்ற வழக்குகளை கவனிக்க மாவட்டம் தோறும் நீதி மன்ற தொடர்பு அலுவலராக (NODOL OFFICER )ஒரு AEEO -வை நியமித்து இயக்குநர் உத்தரவு.......

 

தொடக்கக் கல்வி - "பி" "சி" மற்றும் "டி" பிரிவு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு கடவுச்சீட்டு பெற அல்லது புதுப்பிக்க மறுப்பின்மை சான்று நியமன அலுவலரே (DEEO) வழங்கலாம் என இயக்குனர் உத்தரவு

T.A.T.A - கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட முழக்க போராட்டம்


என்று கிடைக்கும் இந்த ஊதியம்??
இடைநிலை ஆசிரியர்களில் புதிய 
நியமனதாரர்களுக்கு ஆறாவது 
ஊதியகுழுவினால் ஊதிய இழப்பே என்பதை 
விளக்கும் கட்டுரை.


ஆறாவது ஊதியக்குழு ஊதிய விகிதம் 01.6.2009 முதல் இடைநிலை ஆசிரியர்களாக புதியதாக நியமிக்கப்படடவர்களுக்கு, முந்தைய ஊதிய விகிதத்தை ஒப்பிடுகையில் ஊதிய இழப்பையே ஏற்படுத்தியுள்ளது. 1.6.2009 தேதியை கொண்டு பழைய ஊதிய விகிதம் மற்றும் புதிய ஊதிய விகிதம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் விளங்கும்.

தற்போது புதிய ஊதிய விகிதத்தினருக்கான D.A. அறிவித்த பின்னர் முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்று வருபவர்களுக்காக ஒரு அகவிலைப்படி அரசாணை வெளியிடப்பட்டுவருகிறது. தற்போது 80% - க்கான D.A அரசாணை வெளியிடப்பட்ட பின்னர், முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்றுவருபவர்களுக்காக நிதித்துறை அரசாணை 258 நாள்.14.5.2013 இல் D.A. 166% -க்காக வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தை விட, முந்தைய ஊதிய விகிதம் (பழைய ஊதிய விகிதம்) நடைமுறையில் இருந்திருந்தாலே ஊதியம் அதிகம் இருந்திருக்கும் என்பதை விளக்கிக்காட்ட விரும்புகிறேன்.

முந்தைய ஊதிய விகிதமே இருந்திருந்தால் பெற்றிருக்கக்கூடிய ஊதியம்:

BASIC PAY = 4500
DEARNESS PAY (D.P) = 2250
D.A. 166% = 11205
___________
TOTAL 17955
____________
(D.A. நிதித்துறை அரசாணை 258 நாள்.14.5.2013 இன் படி)

ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தில் ஊதியம் பெறுபவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பு.

BASIC = 5200
GRADE PAY = 2800
P.P. = 750
D.A. 80% = 7000
_________
TOTAL 15750
__________
ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தால் புதிய நியமன இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பு 

17955 - 15750 = 2205

எளிதில் புரிவதற்காக 1.1.2013 D.A. அரசாணையை வைத்து விளக்கியுள்ளேன். இதே போன்று 2009 முதல் 2012 வரை அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி அரசாணைகளை வைத்து கணக்கிட்டு பாருங்கள். புதிய ஊதிய விகிததினருக்கு D.A.அரசானை அறிவிக்கப்பட்டு சில வாரங்களில் முந்தைய ஊதிய விகித்தினருக்கும் D.A. அரசாணை வெளியிடப்பட்டு வருகிறது.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பை எங்கள் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (T.A.T.A.) 
தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று வருகிறது. வேறு எந்த சங்கமும் இந்த அளவிற்கு பாதிப்பை குறிப்பிட்டு கோரிக்கை வைத்ததாக தெரியவில்லை. 
எங்கள் சங்கம் மூத்த ஆசிரியர்களுக்கோ அல்லது ஒய்வு பெற்றவர்களுக்கோ எதிரானது அல்ல. அவர்களின் பணி, பெற்றுகொடுத்த பயன்கள் மறுக்கவோ, மறக்கவோ, முடியாதவைகள். இருப்பினும் பணியாளர் சங்கங்களில் பணியில் இருப்போரே அங்கமும், பொறுப்பும் வகிக்க வேண்டும் என்ற எங்களின் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறோம்.

இதனை இங்கு ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்,முற்றிலும் பணியில் இருப்போரை கொண்டதாக சங்கங்கள் இருந்திருந்தால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய பாதிப்பை அரசுக்கு தெரியப்படுத்தி பாதிப்பை சரிசெய்திருக்கலாம். 

இடைநிலை ஆசிரியர் சமுதாய தோழர்களே சிந்தியுங்கள். தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் உங்களை அன்புடன் அழைக்கிறது.

தமிழ் நாடு அரசு ,நிதித் துறையில் இடை நிலை ஆசிரியர் கல்வி தகுதி சான்றிதழ் படிப்பு என G.O.NO.1383 Date 23-08-1988 ன் படி தான் உள்ளது ,அதன் பின் உள்ள நிலை தகுதி மாற்றம் செய்யப்பட வில்லை என கடிதம் எண் ;6777/நிதி /CMPC/2014-1 நாள் ;22.02.2014


பாராளுமன்ற்த்தேர்தல் பள்ளிகள் உள்ளிட்ட கல்வித்துறை அலுவலகங்களில் அரசியல் சார்ந்த படங்கள் ,நாட்காட்டிகள் இல்லாதவாறு நிலையை உறுதிசெய்ய தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவுர‌ை‌.

மேல்நிலை / இடைநிலைக் கல்வி பொதுத் தேர்வுகள் - மார்ச் / ஏப்ரல் 2014 - மைய மதிப்பீட்டுப் பணி - அரசு நிதியுதவி / சுயநிதிப் பள்ளிகள் பணிபுரியும் ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தம் பணியில் முழுமையாக ஈடுபடுத்தவும், இல்லையெனில் பள்ளிகளின் அங்கீகாரம் இரத்து செய்யப்படும் என இயக்குனர் எச்சரிக்கை.

தொடக்கக் கல்வி - பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு பள்ளி வேலை நாட்களில் மாற்றம் I 23.4.14 முதல் 25.4.14 வரை விடுமுறை I 3ம் பருவத் தேர்வு ஏப்.,21ம் தேதி தொடங்கி ஏப்.,29வரை நடக்கிறது I மே1 முதல் கோடை விடுமுறை I தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவிப்பு

பள்ளிக்கல்வி 2014-15 ஆம் கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றிய/நகராட்சி நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துதல்-பள்ளிகள் சார்ந்த விவரங்கள் அனுப்பக் கோருதல் சார்பு

தொடக்கக் கல்வி - தொ.ப.ஆ.கூ மற்றும் டிட்டோஜாக் சார்பில் 7அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி முறையே 26.2.14 மற்றும் 06.03.2014 ஆகிய நாட்களில் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்தகொண்டமைக்கு ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டதற்கான சான்று பெற உத்தரவு

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களில் இளங்கலை / முதுகலை / பட்டயப்படிப்புகள் முடித்த கணினி தெரிந்தவர்களின் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு.

தமிழக பள்ளிகளுக்கு ஏப்ரல் 18 முதல் கோடை விடுமுறை! தமிழக அரசு பரிசீலனை!!


டி.ஆர்.பி., டி.என்.எஸ்.பி.சி - தமிழ் வழி ஒதுக்கீடு அதிர்ச்சி தகவல்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2014ம் கல்வியாண்டிற்கான AEEO / AAEEO பணிமாறுதல் மூலம் நியமனம், AEEO பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2013 முடிய முழுத்தகுதி பெற்ற ஊ.ஒ / நகராட்சி / அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலை (SENIORITY LIST) மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப உத்தரவு

தொடக்கக் கல்வி - சார்நிலைப் பணி - ஊ.ஒ / நகராட்சி / மாநகராட்சி அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் முன்னுரிமை மற்றும் தகுதியுடைய தேர்ந்தோர்ப் பட்டியல் 01.01.2014 நிலவரப்படி தயார் செய்ய இயக்குனர் உத்தரவு

IGNOU RESULTS RE-EVALUATION செய்ய விரும்புவோர் கவனத்திற்கு 

CLICK HERE TO GET THE FORMAT

தொடக்கக் கல்வி - 2013-2014ஆம் கல்வியாண்டில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் சதுரங்கப் பலகைகள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கு செலவினம் அனுமதித்து தமிழக அரசு ஆணை வெளியீடு

இரட்டைப்பட்ட வழக்கு இறுதித் தீர்ப்பு நகல்

 

IGNOU - Term End Exam Results - December 2013

தொடக்கக் கல்வி - தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்ககங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) - 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 06.03.2014 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தவுள்ளது - மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த இயக்குனரின் அறிவுரைகள்